Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

பனங்காய்ப் பணியாரம்

3 comments

பனங்காய்ப் பணியாரம் என்று சொல்லும் போது எமது பாரம்பரியம் நினைவுக்கு வரும். ஏனெனில் எமது மண்ணுக்கே  உரித்தான பனை வளங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளில் இதுவும் ஒன்றாகும்

எம் ஊரில்  உள்ளவர்கள் மட்டுமல்லாமல் உலகம் எங்கும் பரந்து வாழும் நம் தமிழர்கள் இதை செய்து சப்பிடக்கூடும்.

குறைந்த பட்சம் நாங்கள் என்றாலும் அனுப்பியிருப்போம். இன்றைய நவீன உலகில் இது போன்ற பாரம்பரிய உணவுப் பொருட்களைச் செய்து சுவைப்பதற்கு நம்மவர்களுக்கு நேரமில்லை என்பதுடன் வசதிகளும் இல்லை என்பதே உண்மையாகும். இதன் காரணமாக பலர் பனங்காய்ப் பணியாரம் போன்ற உணவுப் பண்டங்களின் 'மறக்க முடியாத சுவையை மறந்து விட்டார்கள்' என்று கூடச்சொல்லலாம். 


எனவே இந்த பனங்காப் பணியாரத்தை வீட்டில் செய்வது எப்படி என்று யாழ் மண் வாசகர்களோடு நாம் பகிர்ந்து கொள்கிறோம்.

(குறிப்பிட்ட அளவு செய்வதற்கு)

தேவையான பொருட்கள்

பனம்பழம் - 02
கோதுமை மா - 1/2 கிலோ கிராம்
சீனி - 400 கிராம்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 1/2 லீற்றர்


செய்முறை

01. முதலில் பனங்காயை நன்றாக நீரினால் கழுவ வேண்டும்.

02. பனங்காயுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் உள்ள பனங்களியை நன்றாகப் பிழிந்தெடுக்க வேண்டும்.

03. அதன் பின்னர் பனங்களியை ஒரு பாத்திரத்தில் இட்டு அதனுடன் சீனி, தேவையான அளவு உப்புச் சேர்த்து, பனங்காயின் பச்சை வாடை போகும் வரை நன்றாக காய்ச்ச வேண்டும்.

04. காய்ச்சிய பனங்களி நன்றாக ஆறியதும், கோதுமை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து கையில் ஒட்டாத பதம் வரும் வரை நன்றாகக் குழைக்க வேண்டும்.

05. அடுப்பை பற்ற வைத்து, அதில் ஒரு தாச்சியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் அதில் பனங்களிக் கலவைவையை சிறு சிறு உருண்டைகளாகப் போடவேண்டும்.

06. அந்த உருண்டைகள் பனங்காய் பணியாரமாக பொன்னிறமாக வரும்போது வடித்து இறக்குங்கள்.

இபோது எமக்கு பனங்காய் பணியாரம் தயார். ஆரோக்கியமான, சுவையான பனங்காய்ப் பணியாரத்தை ஆறவைத்துப் பரிமாறுங்கள்.

குறிப்பு - 

பனங்காய்ப் பணியாரத்தை நன்றாக சூடு ஆறிய பின்னர் உண்ண வேண்டும். காரணம் என்னவெனில் பனங்காய்ப் பணியாரத்தை சூடாகச் சாப்பிட்டால் ஒருவித கசப்புத்தன்மை இருக்கும். அதுமாத்திரமல்லாமல் வயிறு சம்பந்தமான நோய்களும் ஏற்படும். அதிக எண்ணை இருப்பின் ஒற்றி சாப்பிடவும் 
Next PostNewer Post Previous PostOlder Post Home

3 comments:

  1. Anonymous9:23:00 pm

    பனங்காய்ப் பணியாரம் சுவை

    ReplyDelete
  2. நன்றி கேகயன்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா