Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

அன்றைக்கும் அப்படித்தான்

5 comments

நான் பதினோராமாண்டு படித்துக்கொண்டிருந்த நேரம், நாட்டு பிரச்சனை, பயம் என்று சொல்லி அப்பா ஆறுமணிக்கெல்லாம் கேற் பூட்டிப்போடுவார். அதற்கு இரண்டு காரணம் இருந்தது ஒன்று நான் வெளியே போகக்கூடாது என்பது. மற்றையது யாரும் உள்ளே வரக்கூடாது என்பது. அன்றும் அப்படி தான் கதவு பூட்டியிருந்தது.
ரவிச்சித்தப்பாவின் வாகனம் அவரின் வீட்டுக்குள் செல்லும் சத்தம் கேட்டது. எங்கோ நிகழ்வில் கலந்து விட்டு வந்திருக்கவேண்டும். நேரம் அறுமணியை கடந்திருக்கவேண்டும். வெளியே கூப்பிட்ட சத்தம் கேட்டது. 

"நந்தண்ணை". 

அப்பாவின் ஒன்றுவிட்ட சகோதரன் என்றாலும் அவர்களுக்குள் நெருக்கம் அதிகம். காரணம் அப்பா தான் எல்லோருக்கும் மூத்தவர். அதே நெருக்கம் எங்களுக்குள்ளும். 

அந்த நெருக்கம் எப்படி என்று இறுதி சில நிகழ்வுகளை சொல்லலாம், எனக்கு ஒரு ஆங்கில நாவல் வாசிக்க தேவைப்பட்டது அது இங்கு தேடியும் இல்லை. இதற்கு முதல் முறை வந்தபோது அவரிடம் கேட்டேன் கொழும்பில் வாங்கிவரும்படி. அவர் கொழும்பு சென்று இரண்டாவது நாள் வீட்டுக்கு அந்த புத்தகம் வந்து சேர்ந்தது.

"நந்தண்ணை" 

அந்த குரல் கேட்டபோது அவர் தான் என்பதை விளங்கிக்கொண்டேன். அப்பாவை கூப்பிட்டு கதவை திறந்து விட, உள்ளே வந்தார். வாசலில் இருந்து கதைக்க ஆயத்தம் ஆனார்கள். 

"முதல்ல கதவை பூட்டுறத நிப்பாட்டு" 

இப்படித்தான் தொடங்கியது. 

"பெடியளுக்கு பயம் இருக்க கூடாது" 

அவர் அவ்வாறு தான். எனக்கு நினைத்தபடி வாழ கற்றுத்தந்தவர். 

வீட்டில் நிற்கும் போது கூப்பிட்டு நிகழ்வுகளுக்கு வரச்சொல்லி கேப்பார். அப்பா பேசுவார் என்று சொன்னால். 

"நான் சொல்லுறன்"

என்று சொல்லி கூட்டிப்போய்விடுவார். அதே சிவப்பு வாகனத்தில் பலமுறை அவரோடு அவரின் நிகழ்வுகளுக்கு போயிருப்பேன். அந்த பஜிரோவில் செல்வதற்காக தான் போக ஆரம்பித்தேன். அப்படித்தான் எனக்கு மனிதர்களையும் பிடிக்கத்தொடங்கியது.

ஆனால் அந்த நாள் வேறு பல கதைகள் தான் பேசிக்கொண்டார்கள். சாதாரண கதைகள் இல்லை. அப்போதே அச்சுறுத்தல் இருப்பதாக கதை இருந்தது அதுபற்றிய விவாதமாக தான் அன்றைய நாள் இருந்தது. அப்பா வெறுமனே 

"அரசியலை விட்டுவிடு, வெளியால போய் பரிஸ்டர் க்கு படி, உன்ர ஆசைக்கு இதிலயும் இருந்திட்டாய் காணும்" 

அப்பாக்கு அரசியல் பிடிப்பதில்லை. இன்று வரை அப்பாக்கு அரசியல் அப்படி தான். 

"எல்லாம் தலைக்கு மேலால போட்டுது" 

அதற்கு பதில் இது தான். ஆனால் இதன் அர்த்தம் எனக்கு அப்போது புரிந்திருக்கவில்லை. தனக்கு வந்த அழைப்பு பற்றியும் தான் சுடு என்று சொன்னது பற்றியும் பேசிக்கொண்டார். அவர் அப்போதே ஏதோ ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். 

அவர் பயமின்றி இருந்தவர், ஒருமுறை வீதியின் குறுக்கே ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. நான் மாலை தனியார் வகுப்பில் இருந்து வரும்போது வீதியின் குறுக்கே அவர் உட்பட பலர் இருக்கிறார்கள். முன்னால் ராணுவம் துப்பாக்கியுடன் நின்றது. அந்த இறுதி நெருக்கடி நேரத்திலும் அப்படித்தான் இருந்தார், அதை விட ஒருமுறை விமானத்தில் வந்து சாவகச்சேரிக்கு வருவதற்காக இராணுவம் பாதையை  பூட்டி அவரின் வாகனம் செல்வதற்கு பாதுகாப்பு செய்தது.

"நான் மக்கள் பிரதிநிதி, எனக்காக அவர்களை குழப்ப வேண்டாம், வீதியை திறந்து விடுங்கள்" என்று சொல்லி வந்தவர். ஆனால் அந்த உரையாடலின் இடையே ஒரு வசனம் காதில் பட்டது.

"எனக்கு ஏதும் நடந்தாலும் இந்த ரோட்ட திறந்து கொண்டுவர மாட்டாங்கள்" 

அது அரசாங்கம் மீதிதான அவரின் சிந்தனை. ஆனால் திறக்க வேண்டும் என்பது அவரது ஆசை. அதனை அவரின் இறுதி நேர்காணலில் கூட கூறியிருந்தார். அம்பாந்தோட்டை வீதியை மூடிப்பாருங்கள் அப்போது தெரியும் எங்களின் நிலை என்று அந்த நேர்காணல் நீள்கிறது. அது நடக்க மேலும் மூன்று வருடங்கள் தேவைப்பட்டது. 

ஆனாலும் எதுவும் இல்லை, அவரும்  இல்லை. 

2006.11.10 அன்றைக்கு பாடசாலை நாள். வழமை போலத்தான். எனக்கு அந்த செய்தி காதினை அடையும் போது அண்ணளவாக 10.30, 11 மணி இருக்கும். நம்ப முடியவில்லை அல்லது ஏற்க முடியாது இருந்தது. வகுப்பாசிரியர் உதவியுடன் வீடு வந்துவிட்டேன். மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேன் மீண்டுவிட வேண்டும் என்று. வீட்டிலும் பலமுறை கேட்டபடி இருந்தேன்.


அந்த நேரம் உறவுகள் மட்டும் தான், ஒரு வெறுமை. அன்று நான் பார்த்த அந்த வெறுமை இன்றுவரை அப்படியே தான். அந்த நேரம் முதல் வேலைகள் தொடங்கியது, சோககீதங்கள் தென்மராச்சியை வழமைக்கு மாறாக்கியது, கடையடைப்புகள் அவர்மேல் மக்கள் கொண்ட மதிப்பை காண்பித்தது. புகழுடல் வந்த நாள் முதல் குவிந்த மக்கள் வெள்ளம் அவர் மக்கள் மேல் கொண்ட அன்பு தெளிவாக இருந்தது. 

அங்கே சுற்றித்திரிந்த புலனாய்வு காரருக்கு மத்தியில் இவ்வளவு மக்கள் என்பது மிக மிக ஆச்சரியமான ஒன்று தான். யாழ் மாவட்டமே தென்மராட்சியில் திரண்டது. பின்னாலே நடந்து சென்றுவிட்டேன். அவர் என்றும் எனக்கு ஒரு வழிகாட்டி. இப்போதும் அவர் பின்னே தான் எண்ணங்களும்.

எங்கள் எல்லோரையும் கட்டி வைத்திருந்த கயிறு அது. அந்த கயிறு அறுக்கப்பட்டு இன்றோடு ஆண்டுகள் 12.

Next PostNewer Post Previous PostOlder Post Home

5 comments:

  1. மதுஷன் சிவன்3:08:00 pm

    மிக மதிப்பிற்குரிய மனிதர்

    ReplyDelete
  2. En avaralai unkalai mulassalavai seythu poraddaththukku annuppa mudiyalai????? Oh Ninkal avarathu relation ello athanalai than unkalukku paddikka pusthakam vankiththanthirukkirar….. Anraya kalaththil pala palli manavarkalin valkkayai kelvikuriyakkaiya manithan evar.

    ReplyDelete
    Replies
    1. 15 வயது சிறுவர் போராளி என்றதால் விட்டிருக்கலாம். எனக்கு மட்டும் இல்லை யாராக இருந்தாலும் உதவி செய்பவர்.
      blob:https://www.dailymotion.com/266600b2-71c5-4496-91e4-d6a6f8f9845c

      Delete
    2. Appo 16 vayathu siruvar ellaya?
      Reply

      Delete
  3. Appo 16 vayathu siruvar ellaya?

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா