Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயரிய விருது!

Leave a Comment
யாழ். சாவகச்சேரியை சேர்ந்தவருக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயரிய விருது!

யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான Champion of Change விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (29) காலை வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இந்த விருது வழங்கல் நிகழ்வில் இவருடன் மேலும் 10 பேரும் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர் எஸ். சிவானந்தன் ஒருவரே தழிழர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிக்காக்கோ இலினோஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றும் சிவலிங்கம் சிவானந்தன் இயற்பியலில் பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளதுடன், பல ஆய்வுகளிலும் இடுபட்டுள்ளார்.

தனது முயற்சியினால் “சிவானந்தன் ஆய்வு மையம்” என்ற இயற்பியல் ஆய்வு கூடத்தை நிறுவி அதனூடாக பல ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதுடன், இலாப நோக்கற்ற பல ஆய்வு உதவிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

இவரது அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெளதீகவியற்றுறையினரும் கூரியக் கதிர் தொழில்நுட்பத்தில் கூட்டு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவானந்தன் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.


அன்புடன் தமிழ்நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா