Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

சாந்தி நிலையம் எதற்கு...??

7 comments

உலக சனத்தொகை செக்கனுக்கு செக்கன் அதிகரித்து வரும் நிலையில் எமது இலங்கையின் சனத்தொகை அதிகரிக்கும் வீதத்தில் இருந்தாலும் குறைவாகவே இருக்கிறது. காரணம் பிரதானமாக யுத்தம் ஒன்றே. சிறு சிறு காரணங்களாக கொலை, விபத்துகள், இயற்கை அழிவுகளை கூறலாம்.
இவற்றில் அதிகமாக இளைஞர்களே உயிரிளக்கிரர்கள். இந்த  காரணத்தினால் 2020 ஆம் ஆண்டளவில் சனத்தொகையில், 60% ஆனவர்கள்  60 வயதை கடந்த வயோதிபர் நிலையை அடைவார்.

இன்று நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்தாலும் முதுமை அடையும் மக்களை பராமரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு எந்தவொரு தரத்தினரும் சிறிதளவேனும் ஆர்வம் காண்பிக்காதிருப்பது ஏன் என்று தெரியவில்லை...?

கடந்த காலத்தில் இலங்கையில் பல தலைமுறைகளாக நிலவி வந்த குடும்ப ஒற்றுமைகள் வழமைகள்  இப்போது, இந்த நவீன உலகில் கைவிடப்படும் ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்கிறார்கள்.. ஆனால் அது எப்போதோ எம்மை ஆழ தொடங்கிவிட்டது.

முன்னைய சமுதாய அமைப்பில் கூட்டுக் குடும்பங்கள் தான் சிறப்பாக விளங்கின. ஒரு முதிய தாயாருக்கும், தந்தைக்கும் இருக்கும் மகன்மார்களும் மகள்மார்களும் மணம் முடித்து அந்த வீட்டிலே சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரே சமையலறையில் அந்த வீட்டின் முதிய தாயார் அல்லது முதிய மாமியாரின் மேற்பார்வையின் கீழ் மருமகள்மார்கள் ஒற்றுமையாக சமைத்து அந்த கூட்டுக் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் உணவை பரிமாறுவார்கள்.

இப்போது எமது சூழலில் அதே மகன் அல்லது மகள், அதே மருமகள் அல்லது மருமகனால் வீட்டில் இருந்து துரத்தப்பட்டு, தனியாக துன்பங்களுடன் அநாதை இல்லங்கள்.. முதியோர் இல்லங்கள், மடங்களை தேடி சரண் அடைகிறார்கள்.

இதில் பல கரணங்கள். இரு பக்கத்தருக்கும் உண்டு.


பெற்றோர்

*அவர்களுக்கு வருமானம் இல்லாத காரணத்தால் பிள்ளைகள் பாக்க பின்னித்தல்
* நோய் வாய்ப்பட்டிருத்தல்.
* தமது பிள்ளைகளுக்கு ஒரு இடைஞ்சலாக கருதுதல்.
* தமது நாகரிக வாழ்க்கையில் அவர்கள் இடையுறாக இருத்தல்.
* வெளிநாடுகளில் பிள்ளைகள் 
* ஊனம் அடைந்திருத்தல்..மேலும் பல..

பிள்ளைகள்

* பெற்றோர்கள் விட்டு கொடுக்காமை,
* சுகாதார நடை முறைகளை கடைப்பிடிக்காமை.
* பிள்ளைகளுக்கு குடும்பம் ஆன பின்னும் அவர்களை சிறியவர் என கருதி கட்டு பாடு போடுதல்.  மேலும் பல..

எனவே தான் அதிகமானவர் முதியோர் இல்லங்களை நாடுகின்றனர். அதுமட்டுமன்றி, வெளிநாட்டிலுள்ளவர்களை முதுமைக் காலத்தில் பராமரிப்பதற்கு சகல வசதிகளையுடைய இல்லங்களை அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் தனியார் நடத்துவதற்கும் அந்நாட்டு அரசாங்கங்கள் நிதி உதவியை வழங்குகின்றன.

இலங்கையில் அப்படியான வசதிகள் சாதாரண மக்களுக்கு இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. அத்தகைய வசதிகளுக்கு பதிலாக ஒரு சிறு தொகை சமுர்த்தி திட்டத்தின் மூலம் பிச்சை  சம்பளமாக கொடுக்கப்படுகின்றது. அந்தத் தொகை வயோதிபத்தை அடையும் ஒருவருக்கு இரண்டு, மூன்று நாட்கள் வாழ்வதற்கு கூட போதுமானதாக இல்லை. 

வயோதிப பெற்றோரை பிள்ளைகள் கவனிப்பதில்லை. அவர்களை வயோதிபத்தில் வயோதிப இல்லங்களில் சேர்த்துவிடுவார்கள். பிள்ளைகள் வயோதிப இல்லத்துக்கான கட்டணத்தைக்கூடச் செலுத்துவதில்லை. வயோதிப மடங்களும் வருமானம் பெரும் வழிகளையே நாடுகின்றன.

இதனால் தான் வயோதிபத்தை அடைந்து உற்றார் உறவினர் இன்றி, ஆண், பெண் பேதமின்றி வயோதிபர்கள் வீதி ஓரங்களிலும் நடைபாதைகளிலும் கடும் வெய்யிலிலும், பெரும் மழையிலும் துன்பத்துடன் வாழ்ந்துகொண்டு, இறுதியில் மடிந்து போகின்றனர்.

ஆனால் இலங்கையில் குறிப்பட்ட அளவினர்  இன்று கூட பெற்றோரை  பராமரிக்கின்றனர். இன்னும், பத்து பதினைந்து வருடங்களில் நாகரீகமென்ற போர்வையின் கீழ் பெற்றோரை அவர்களின் பிள்ளைகளை மேற்கத்திய நாட்டுப் பிள்ளைகள் போன்று மறந்து வயோதிப விடுதிகளிலும் தள்ளிவிடுவதற்கான ஆயத்தங்களும் நடக்கிர்ந்றன.,.

அன்புடன் தமிழ் நிலா 
Next PostNewer Post Previous PostOlder Post Home

7 comments:

  1. Anonymous8:19:00 am

    பெற்றோரை பாக்காமல் ஏன் பிள்ளைகள்

    ReplyDelete
  2. Suba U.K8:20:00 am

    nalla pathivu thevayanathu than

    ReplyDelete
  3. saravanapavan8:21:00 am

    nanpare ungal thura nokkaana sinthanaikal enakku purikirathu..

    ReplyDelete
  4. saravanapavan8:22:00 am

    valththukal koora maranthuvidden vaalththukal ....

    ReplyDelete
  5. நன்றி உறவுகளே..

    ReplyDelete
  6. Suba U.K6:44:00 am

    சாந்திநிலயங்கள் எதற்காக...

    ReplyDelete
  7. இதற்காக தான் தோழி... பெற்றோரை ஏன் அங்கெ விடவேண்டும். பெத்ததாலேய?

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா